டெல்லியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார்.
தாகிர்புர் ராஜிவ்காந்தி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றிய ராஜ்குமார் மற்றும் கல்யான்புரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ஓம்பால் சிங் ஆகியோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து அவர்களது குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.