ஜம்மு காஷ்மீருக்கு வந்துள்ள வெளிநாட்டு தூதர்களிடம், கட்டுப்பாட்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தீவிரவாத பயிற்சி முகாம்கள் குறித்து மூத்த ராணுவ அதிகாரிகள் விளக்கினர்.
கடந்த ஓராண்டில் 3 ஆவது முறையாக வெளிநாட்டு தூதர்கள் ஜம்மு காஷ்மீருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த முறை 24 தூதர்கள் வந்துள்ளனர்.அவர்கள் ஜம்முவில் பல இடங்களை பார்வையிட்டனர்.
அப்போது தீவிரவாதிகளை பாகிஸ்தான் எப்படி இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்கிறது, ஊடுருவலுக்கு பாகிஸ்தான் செய்து கொடுக்கும் வசதிகள் உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் ராணுவ அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.
காஷ்மீர் இளைஞர்களை இணையம் வாயிலாக பாகிஸ்தான் மூளைசலவை செய்வது பற்றியும் வெளிநாட்டு தூதர்களிடம் எடுத்து சொல்லப்பட்டது.