இந்தியாவின் மெட்ரோமேன் என கூறப்படும் 88 வயதான எஞ்சினியர் ஸ்ரீதரன், விரைவில் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 21 ஆம் தேதி, கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் துவக்க உள்ள விஜய் யாத்ராவின் போது ஸ்ரீதரன் பாஜகவில் சேருவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி மெட்ரோவின் தலைவராக இருந்து அதை வெற்றிகரமாக துவக்கிய இவர் இந்திய மெட்ரோ ரயில் திட்டங்களின் தந்தையாக பார்க்கப்படுவர். பாலக்காடு மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீதரன் கொங்கன் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு சவாலான ரயில்வே திட்டங்களிலும் திறம்பட பங்காற்றியவர்.