மிஸ் இந்தியா அழகி போட்டியில் 2-வது இடம் பிடித்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகள் மன்யா சிங், தனக்கு அளித்த பாராட்டு விழாவுக்கு குடும்பத்துடன் ஆட்டோவில் வந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
வறுமை சூழ்ந்த குடும்பத்தில் பிறந்து, படித்துக் கொண்டே அழகி போட்டியிலும் வெற்றி பெற்ற மன்யா சிங் வாழ்க்கையின் கருப்பு பக்கங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிலையில், மன்யா சிங் பயின்று வரும் தாகூர் கல்லூரியில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தனது தந்தையின் ஆட்டோவிலேயே குடும்பத்துடன் வந்து மன்யா சிங் கலந்து கொண்டார். புகழின் உச்சத்திற்கு சென்றாலும், வந்த வழியை மறக்கக்கூடாது என்பதை மன்யா சிங் நினைவுபடுத்தியுள்ளார்.