மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஆடுகளத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த வீரர் மாரடைப்பால் தரையில் சாய்ந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
புனே மாவட்டம் யாதவ் வாடியில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கின் மறு முனையில் நின்று கொண்டிருந்த வீரர் திடீரெனத் தரையில் சாய்ந்து விழுந்தார். உடனடியாக நடுவரும் மற்ற வீரர்களும் விரைந்து அவரைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உடற்கூறாய்வில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.