பிரதமர் மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் பெயரில் போலி பணி நியமன ஆணைகள் தயாரித்த வழக்கில் கைதானவர்களை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக பெங்களூரு, மைசூரு கொண்டு சென்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மைசூரைச் சேர்ந்த மகாதேவய்யா, அவரது மகன் அங்கித், ஓசூரைச் சேர்ந்த ஓம் ஆகிய மூவரையும் முதல்கட்ட விசாரணைக்காக ஓசூர், பெங்களூரு, மைசூரு கொண்டு சென்றனர்.
முன்னர் இவர்களை கைது செய்ய சென்றபோது, தமிழக சிபிசிஐடி போலீசாரை கடத்தல் கும்பல் என கர்நாடக போலீசாரை கடத்தல் வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளனர். இதனால் இம்முறை துப்பாக்கி ஏந்திய போலீஸ் படை பாதுகாப்புடன் கைதான மூவரையும் கர்நாடகா கொண்டு சென்றுள்ளனர்.
பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் துணையுடன், அரசுத் துறையில் சிலருக்கு வேலையும் வாங்கி கொடுத்துள்ளதுடன், பலரை மோசடி செய்துள்ளனர் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.