விவசாயிகள் இன்று நண்பகல் முதல் 4 மணி நேரத்துக்கு ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் ரயில் நிலையங்களில் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்த பட்ச ஆதரவு விலை முறையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி விவசாயிகள் இன்று நண்பகல் முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அமைதியாக நடைபெறும் இந்த மறியலின்போது நடுவழியில் தவிக்கும் பயணிகளுக்குத் தண்ணீர், பால், லசி, பழங்கள் வழங்கித் தங்கள் கோரிக்கைகளின் நியாயங்களை எடுத்துரைக்கப் போவதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.