செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

சுதந்திரத்துக்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி... காதலுக்காக பெற்றோர், அண்ணன்கள் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்தவர்

Feb 18, 2021 11:28:12 AM

காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த சப்னம் என்ற பெண் இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளியாகியுள்ளார்.

உத்தபிரதேச மாநிலம் அம்ரோ மாவட்டத்திலுள்ள பாவன்கேடி என்ற இடத்தைச் சேர்ந்த சப்னம், அதே ஊரைச் சேர்ந்த சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், சப்னம் -சலீம் காதலை பெண் வீட்டார் ஏற்கவில்லை. சப்னம் எம்.ஏ வரை படித்து விட்டு அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்துள்ளார். நான்காம் வகுப்பு கூட தாண்டாத சலீமை அவர் காதலித்தது சப்னத்தின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. 

இதைத் தொடர்ந்து , சப்னம் தன் காதலருடன் சேர்ந்து தன் குடும்பத்தையே கொலை செய்ய துணிந்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி தன் குடும்பத்தினருக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து மயங்க செய்துள்ளார். பின்னர், தன் பெற்றோர், இரண்டு அண்ணன்கள், அவர்களின் இரு மனைவிகள் அண்ணனின் 10 மாத ஆண்குழந்தை ஆகியோரை தன் காதலருடன் சேர்ந்து சப்னம் கொலை செய்தார்.

இந்த வழக்கு அம்ரோ மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டு சப்னம் மற்றும் சலீமுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் , உச்சநீதிமன்றத்திலும் இருவரின் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும், சப்னத்தின் கருணைமனுவையும் உத்தரபிரதேச மாநில கவர்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரும் தள்ளுபடி செய்து விட்டனர்.

தற்போது, சலீம் ஆக்ரா சிறையிலும் சப்னம் ராம்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரா மாவட்ட நிர்வாகம் சப்னத்தை தூக்கிலிடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் , டெத் வார்ரன்ட் வழங்கப்படும் என்று தெரிகிறது. டெத் வாரன்ட் வழங்கப்பட்டதும் மதுரா சிறைக்கு சப்னா மாற்றப்பட்டு தூக்கிலிடப்படுவார்.

நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட்ட பவான் ஜலாட்தான் சப்னத்தையும் தூக்கில் போடுகிறார். ஆனால், சப்னத்தை தூக்கிலிடப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தியாவில் மதுரா சிறையில் மட்டும்தான் பெண்களை தூக்கிலிடும் அறை உள்ளது முன்னதாக, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பல பெண் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், சப்னம் விஷயத்தில் மரண தண்டனை குறைக்கப்படவில்லை . 150 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் 1870 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் பெண்கள் சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளனர். சுதந்திரத்துக்கு பிறகு, தூக்கிலிடப்படும் முதல் பெண் சப்னம் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கிறிஸ்துமஸ் விழாவில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்பு... கேக் வெட்டி கொண்டாட்டம்
மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதி... 2026 குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தி பங்கேற்க முடியும்
கேரளத்தில் மேற்குவங்க பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் மாநிலத்தை 2 பேர் கைது
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு... நாள்தோறும் சுமார் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் தரிசனம் செய்து வருவதாக தகவல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருப்பதி மலையில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம்.. முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்..
கட்டுப்பாட்டை இழந்த கடற்படைக்கு சொந்தமான படகு பயங்கரமாக மோதி விபத்து..
கேரளாவில் இருந்து இறைச்சி, மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்படுவதாக புகார்
சபரிமலை கோவில் மேற்கூரையிலிருந்து நின்று பக்தர் எடுத்த விபரீத முடிவு

Advertisement
Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்

Posted Dec 24, 2024 in இந்தியா,Big Stories,

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்


Advertisement