பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலமான நான்கனா சாகிப்பிற்கு செல்ல சீக்கியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அப்புனிதத் தலத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்றுமுதல் 25ம் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள 600 பேர் கொண்ட சீக்கிய பக்தர்கள் குழு செல்ல இருந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளைக் கருதி, கொரோனா தொற்று காரணமாக பெருமளவில் அங்கு சீக்கியர்கள் திரளாக செல்வது அறிவார்ந்த செயல் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையே எல்லைத் தாண்டி செல்வதற்கான போக்குவரத்தும கொரோனாவால் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.