சீரம் நிறுவனத்தின் 5 லட்சத்து 80 ஆயிரம் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி அர்ஜென்டினாவை சென்றடைந்தது.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. இதையடுத்து பெங்களூருவை சேர்ந்த சீரம் மற்றும் ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் 5 லட்சத்து 80 ஆயிரம் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிகளை வாங்கி உள்ளது.
தலைநகர் பியூனஸ் ஏர்ஸை தடுப்பூசிகள் சென்றடைந்த நிலையில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், போலீசார், மூத்த குடிமக்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்த அர்ஜென்டினா அரசு முடிவு செய்து உள்ளது.