ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு நன்கொடை தராதவர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மிரட்டுவதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவில், ராமருக்கு கோயில் கட்டுவதை தான் எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் நன்கொடை வழங்கியவர்களையும், வழங்காதவர்களையும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பிரித்து வைத்து மிரட்டுவது ஜெர்மனியில் நாஸிக்கள் செய்ததைப் போல இருப்பாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
தானும் மிரட்டலுக்கு உள்ளானதாகவும் குமாரசாமி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.