குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது, கைகளில் வாள் ஏந்தி சுழற்றிய ஏ.சி. மெக்கானிக் ஒருவரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.
டெல்லி பிதாம்புரா பகுதியில் கைது செய்யப்பட்ட மணீந்தர் சிங் என்ற இந்த நபரிடம் இருந்து இரண்டு வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
செங்கோட்டை வன்முறையின் போது இந்த நபர் வாட்களை வீசி குழப்பமான சூழலை ஏற்படுத்தியது வீடியோ ஒன்று வாயிலாக தெரிய வந்துள்ளது.