பாஜக ஆட்சியை நேபாளத்துக்கும் விரிவுபடுத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளதாகத் திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேவ் கூறியதற்கு அந்நாடு கண்டனம் தெரிவித்துள்ளது.
அகர்தலாவில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிப்லப் தேவ், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைத்தபின், நேபாளத்திலும், இலங்கையிலும் ஆட்சியை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தன்னிடம் அமித் ஷா கூறியதாகத் தெரிவித்தார்.
திரிபுரா முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு நேபாளத்தில் கடும் எதிர்ப்பு உருவானதுடன், அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் பிப்லப் தேவ் பேச்சுக்கு இந்திய அரசிடம் முறைப்படி கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.