இணையம் மூலம் இயங்கும் ‘ஓடிடி’ தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றவற்றை ஒழுங்குமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
டிஜிட்டல் ஊடகங்கள், ஓடிடி தளங்கள் போன்றவற்றில் வரும் நிகழ்ச்சிகளைக் கண்காணித்து மேலாண்மை செய்வதற்காக தனி அமைப்பை உருவாக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை நேற்று வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ், ‘ஓடிடி தளங்களை ஒழுங்குமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றார்.