ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் குழு இன்று மூன்றாவது முறையாக காஷ்மீரில் கள ஆய்வு செய்ய உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சர்வதேச அரங்குகளிலும் ஐ.நா.மனித உரிமைக் குழுவிலும் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க வெளியுறவு அமைச்சகம் சார்பில் வெளிநாட்டு உயர் அதிகாரிகள் குழு காஷ்மீரை நேரில் காண அழைக்க்பட்டுள்ளது.
தீவிரவாதம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்து அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேச இக்குழு திட்டமிட்டுள்ளது.