டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறையை தூண்டினார் என கைது செய்யப்பட்ட பஞ்சாபி நடிகர் தீப் சித்துவின் போலீஸ் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறைக்கு இவரே முக்கிய சூத்திரதாரி என்று வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் சித்துவை கடந்த 9 ஆம் தேதி அரியானாவில் உள்ள கர்னால் புறவழிச்சாலையில் வைத்து கைது செய்தனர்.
அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. செங்கோட்டையில் நடந்த வன்முறைக்குப் பின்னால் பெரிய சதித் திட்டம் உள்ளதா என்ற கோணத்தில் இந்த வழக்கை டெல்லி போலீசின் கிரைம் பிராஞ்ச் விசாரித்து வருகிறது.