கேரளாவில் 310 கிலோமீட்டர் நீள நீர்வழித்தடத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
கேரள போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையின் புதிய அத்தியாயமாக, 520 கிலோமீட்டர் நீள நீர்வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதல்கட்டமாக 310 கிலோமீட்டர் தூர நீர்வழித்தட பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நீர்வழித்தடம் கேரளாவின் தெற்கு பகுதியான கோவளத்தை, வடக்குப்பகுதியான பெக்கால் உடன் இணைக்கிறது. இதில் வேலி என்ற இடத்திலிருந்து கடினம்குளம் என்ற இடம் வரை 11 கிலோமீட்டர் தூரத்தில் 24 இருக்கைகள் கொண்ட சூரியசக்தி படகு மூலம் சவாரி செய்யலாம். இந்த படகில் பினராயி விஜயன் பயணம் செய்தார்.