நாட்டில் தற்போது இயங்கி வரும் 4 நடுத்தர அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றை தனியார்மயமாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு வருவாய் கிடைக்கவும், வங்கிகளின் கடனை குறைக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் நிதியாண்டில் இந்த 4 வங்கிகளில் 2 வங்கிகள் தனியார் மயமாகும் என்ற அறிவிப்பு வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.