கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி பண மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த மாநில பள்ளிகல்வித்துறை அமைச்சரான சுரேஷ்குமார் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கிய மர்மநபர்கள், அவரது புகைப்படத்தை முகநூல் பக்கத்தின் முகப்பில் வைத்து உள்ளனர்.
பின்னர் சுரேஷ்குமார் பேசுவது போல அவரது நண்பர்களிடம் பேசி பணம் பெற்று மோசடி செய்து உள்ளனர். இதுபற்றி அறிந்த சுரேஷ்குமாரின் தனி செயலாளர் பி.ஏ.சிதம்பரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.