விவசாயிகள் போராட்டத்தைத் தூண்டும் கருத்துரு உருவாக்கிய குற்றச்சாட்டில் வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பைப் பிடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
ஏற்கெனவே பெங்களூரைச் சேர்ந்த திசா ரவியை டெல்லிக் காவல்துறை கைது செய்துள்ளது. அதே வழக்கில் மும்பையைச் சேர்ந்த நிகிதா ஜேக்கப், சாந்தனு ஆகியோருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இருவரும் போராட்டக் கருத்துருவை உருவாக்கியதாகவும், காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினருடன் நேரடித் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில் நிகிதா ஜேக்கப், மும்பை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார்.