அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுக்காப்பீட்டு நிறுவனங்களுக்கு மார்ச் மாதத்தில் கூடுதல் முதலீடாக மூவாயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
நேசனல் இன்சூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய மூன்று பொதுக்காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கூடுதல் முதலீடு வழங்க மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டில் ஒப்புதல் அளித்தது.
அதன்படி மூன்று நிறுவனங்களுக்கும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மூவாயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. மார்ச் எட்டாம் நாள் நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது துணைமானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
அதன்பின் இந்தக் கூடுதல் முதலீடு மூன்று நிறுவனங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.