காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முயன்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புட்காம் மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் ராணுவத்தினர் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த இருவரைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் லஷ்கர் இ தொய்பா மற்றும் தெஹ்ரிக் உல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பது தெரியவந்தது.
இருவரும் புல்வாமா மற்றும் குல்காம் மாவட்டங்களில் கையெறி குண்டுகளை வீசியதாக போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.