மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோரின் பெயர்த்தி தாரா பட்டாச்சார்ஜி டெல்லி காசிப்பூருக்கு நேரில் சென்று அங்குப் போராடும் விவசாயிகளைச் சந்தித்துத் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார்.
மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் - ராஜாஜியின் மகள் லட்சுமி ஆகியோரின் மகள் தாரா பட்டாச்சார்ஜி. தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் தலைவரான இவர் டெல்லி காசிப்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்குச் சனிக்கிழமை சென்றார்.
விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், போராட்டத்தைத் தொடர்ந்து அமைதியாக நடத்தும்படி கேட்டுக்கொண்டார். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்கும்படி அரசுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.