கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் பெங்களூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் 42 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நர்சிங் கல்லூரியில் உள்ள 210 மாணவர்களில் 70 சதவீத மாணவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கிருந்து தொற்று பரவியிருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. கல்லூரியில் உள்ள மாணவர்கள் வார விடுமுறையில் சொந்த ஊர் சென்று திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட 42 மாணவிகளில் 18 பேர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நர்சிங் கல்லூரி வளாகம் மூடப்பட்டு மீதமுள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.