விவசாயிகளின் போராட்டக் கருத்துரு, வழிமுறைகளை உருவாக்கித் தூண்டி விட்டது தொடர்பாகக் காலநிலைச் செயற்பாட்டாளரான திசா ரவியைப் பெங்களூரில் டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சுவீடனைச் சேர்ந்த காலநிலைச் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், பார்படாசைச் சேர்ந்த பாடகி ரிகானா ஆகியோர் டுவிட்டரில் கருத்துத் தெரிவித்தனர்.
இதையடுத்துப் போராட்டத்துக்கான கருத்துருவையும் வழிமுறைகளையும் உருவாக்கித் தூண்டிவிட்டது யார் என்பது குறித்து டெல்லிக் காவல்துறையின் சைபர்கிரைம் பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் காலநிலைச் செயற்பாட்டாளரான 21 வயதுப் பெண் திசா ரவியைப் பெங்களூரில் கைது செய்துள்ளனர்.