நாடு முழுவதும் 7ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
28 நாட்களுக்கு முன்னர் நாடு தழுவிய அளவில் கொரோனா தடுப்பூசி திட்டம் துவங்கியது. முதல் நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டது. அவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடும் பணி நேற்று துவங்கியது.
நேற்று மட்டும் 7 ஆயிரத்து 668 சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் டோஸ் போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை தொட்டுள்ளது.
இவர்களில் சுமார் 60 லட்சம் பேர் சுகாதார பணியாளர்கள் என்றும், 21 லட்சம் பேர் முன்களப்பணியாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.