ரோஹ்டக்கில் மல்யுத்தப் பயிற்சி மையத்தில் 5 பேரை சுட்டுக் கொன்று தப்பிய கொலையாளி சுக்வீந்தர் சிங்கை டெல்லி மற்றும் ஹரியானா மாநில போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளி சுக்வீந்தர் சிங்கைப் பிடிக்க உதவினால் போலீசார் ஒருலட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்திருந்தனர். தலைமறைவாக இருந்த சுக்வீந்தர் சிங் டெல்லி, ஹரியானா போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளான்.
கல்லூரியில் மல்யுத்த பயிற்சியாளராக இருந்த அவன் மீது பல்வேறு புகார்கள் வந்ததால் வேலையை விட்டு மனோஜ் மாலிக் நீக்கியுள்ளார். அந்த ஆத்திரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் மல்யுத்த வீராங்கனை மீது சுக்வீந்தர் சிங் தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.