தன்னிச்சையாக எல்லையில் கள நிலவரத்தை சீனா மாற்ற முயன்றதால் இரு நாடுகளுக்கும் இடையே அவநம்பிக்கை உருவாகி உள்ளதாக இந்திய ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார்.
டெல்லியில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், சீனா-அமெரிக்கா மோதலால், பிராந்திய சமசீரின்மையும்,உறுதியற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது என்றார்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் தொடர் நடவடிக்கை காரணமாக பயங்கரவாத செயல்கள் முற்றிலுமாக குறைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். மியான்மார் நாட்டு ராணுவத்துடன் இந்திய ராணுவம் இணைந்து எடுத்த நடவடிக்கைகளால், பயங்கரவாத இயக்கங்கள் ஒடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.