உரிய நேரத்தில் ஜம்மு காஷ்மீருக்கு திரும்பவும் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
மக்களவையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்த அவர், இந்த மசோதா ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிப்பதற்கானது அல்ல என கூறினார். மசோதா மீதான விவாதத்தின் போது, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வளர்ச்சி என்ற பெயரில் போலியான வாக்குறுதிகள் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றஞ்சாட்டினர்.
அதற்கு பதிலளித்த அமித் ஷா, 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீருக்கு ஒன்றும் செய்யாத காங்கிரஸ் கட்சி கடந்த 17 மாதங்களில் பாஜக அரசு என்ன செய்தது என கேட்பது வினோதமாக உள்ளது என கூறினார்.