ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான அரோரா அகாங்சா அறிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்செயலர் அன்றானியோ குட்டரசின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது.
மேலும் ஓர் ஐந்தாண்டுகள் பதவியில் இருக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தில் தணிக்கை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 34 வயதுப் பெண் அரோரா அகாங்சா ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்குத் தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
அரோரா பார் செக்ரட்டரி ஜெனரல் என்னும் ஹேஷ்டேக்குடன் டுவிட்டரில் அதற்கான பிரச்சாரத்தையும் தொடங்கி இரண்டரை நிமிட வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.