கேரளாவின் முக்கிய மலை சுற்றுலா மையமான மூணாறில், வெப்ப நிலை, உறைநிலைக்கும் கீழே சென்றுள்ளது. இதனால் உறைபனி உருவாகி, தாவரங்கள் மற்றும் புல்வெளிகளை மூடியுள்ளது.
உறைபனி காரணமாக, வெண்போர்வை போல பல பகுதிகள் காட்சி அளிப்பதால் மூணாறில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி உள்ளதாக இடுக்கி மாவட்ட சுற்று வளர்ச்சிக் கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர்.