தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உயிருக்கு குறிவைத்துள்ள பாகிஸ்தானின் திட்டம், பிடிபட்ட தீவிரவாதி மூலம் அம்பலமானதை அடுத்து, அவரது அலுவலகத்திற்கு பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு பாடம்புகட்டிய துல்லிய தாக்குதல் மற்றும் பாலக்கோட் தாக்குதல்களுக்கு பிறகு, அஜித் தோவல் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் குறிவைக்கப்படும் நபராக உள்ளார்.
இந்நிலையில், உயர்பாதுகாப்பு வளையத்தில் உள்ள அஜித் தோவல் அலுவலகத்தை உளவுபார்த்ததாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை வீடியோ பதிவு செய்ததாகவும், ஜம்மு-காஷ்மீரில் கடந்த பிப்ரவரியில் பிடிபட்ட ஜெய்ஷ் தீவிரவாதி ஹிதாயத்துல்லா மாலிக் கூறியிருந்தான்.
இதற்காக பயன்படுத்திய ரகசிய குறியீடுகள், பெயர்கள், பாகிஸ்தானை சேர்ந்த 10 பேரின் ஃபோன் நம்பர்களையும் பிடிபட்ட தீவிரவாதி கூறியுள்ளான்.