கடந்தாண்டு 6 கோடி பிபிஇ உடைகள் உற்பத்தி செய்யப்பட்டதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ரானி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர், கொரோனா தொற்று காலத்தில் பிபிஇ உடைகள், என்-95 முகக் கவசங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன என்றார்.
கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, 6 கோடி பிபிஇ உடைகள், 15 கோடி என்-95 முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டதாக கூறிய அவர், பிபிஇ உடைகள் தயாரிப்புக்கு 1100 நிறுவனங்களும், என்-95 முகக்கவசங்கள் தயாரிப்புக்கு 200 நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன என்றார்.