மும்பைத் தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான தஹாவூர் ராணாவை இந்தியா அழைத்து வருவதற்கான சட்டரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அவர் மீதான வழக்கின் விசாரணை வரும் ஏப்ரல் மாதம் 22ம் தேதி தொடங்க உள்ளது.
பாகிஸ்தானில் பிறந்து கனடா நாட்டுக்கு குடிபெயர்ந்த ராணா, லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணைக்கு இந்தியா அனுப்பி வைக்குமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.