இந்தியாவில் முதன்முறையாக எரிவாயுவில் இயங்க கூடிய டிராக்டரை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி டெல்லியில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த டிராக்டரை பயன்படுத்துவதால் எரிபொருள் செலவு குறைந்து, விவசாயிகள் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை சேமிக்கலாம் என்றும், அதன் மூலம் அவர்களது வாழ்க்கை தரம் மேம்படும் என்றும் குறிப்பிட்டார்.
சிஎன்ஜி டேங்க் பாதுகாப்பாகவும், வலிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளதால், எந்த வெடி விபத்தும் நேரிடவும் வாய்ப்பிருக்காது என்று அவர் கூறினார். சிஎன்ஜி மூலம் இயங்கும் டிராக்டரில் குறைந்த அளவிலான கார்பனே வெளியேறுவதால், சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்று நிதின்கட்காரி தெரிவித்தார்.