நாட்டின் வளர்ச்சி, மேம்பாடு, சீர்திருத்தத்தை உள்ளடக்கியதாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அவர், பிரதமரின் நிர்வாக திறனை பிரதிபலிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது என்றார்.
நாட்டில் 80 கோடி பேருக்கு இலவச உணவும், 8 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஏழைகளின் நல்வாழ்வுகாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சிலர் திட்டமிட்டு குறை கூறுவதாக அவர் தெரிவித்தார்.
வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.67 கோடி பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது பணக்காரர்களுக்கானதாக என வினா தொடுத்தார்.