ஒடிசா கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகளுக்குத் தேர்தலை அறிவித்துள்ள ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒடிசாவின் கோராபுத் மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சிகளுக்கு ஆந்திர அரசு உரிமை கோரி வருகிறது.
இது குறித்த வழக்கில் முந்தைய நிலையைப் பராமரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் அப்பகுதிகள் ஒடிசாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.
ஆந்திரத்தில் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்த மாநிலத் தேர்தல் ஆணையம், ஒடிசாவின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று ஊராட்சிகளுக்கும் தேர்தல் அறிவித்துள்ளது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஒடிசா அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், விஜயநகரம் மாவட்ட ஆட்சியர், ஆந்திரத் தலைமைச் செயலாளர், ஆந்திர மாநிலத் தேர்தல் ஆணையர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது.
இது குறித்து வரும் 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.