அசாமில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், மது வகைகள் மீதான வரி 25 விழுக்காடும் குறைக்கப்பட்டுள்ளது.
அசாமில் சர்வானந்த சோனாவால் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இப்போதுள்ள சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ளதால் விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் அசாம் அரசு பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்துள்ளது.
மது வகைகளின் மீதான வரியை 25 விழுக்காடும் குறைத்துள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.