நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், 127 நகரங்கள் போதைப் பொருள் மையங்களாக உள்ளதாகவும் சமூக நீதி அமைச்சகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகம் 2019ஆம் ஆண்டு தேசிய அளவில் நடத்திய ஆய்வில் 3 கோடியே 10 லட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாகவும், 2 கோடியே 6 லட்சம் பேர் அபின் பயன்படுத்துவதாகவும், ஒரு கோடியே 18 லட்சம் பேர் போதை மருந்துகளைப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கால் தீங்கான விளைவுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 127 நகரங்கள் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தும் மையங்களாக உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.