உத்தரக்கண்ட் மாநிலத்தில் பனிப்பாளங்களும் பாறைகளும் உடைந்து விழுந்த இடத்தில் ஆற்றின் போக்கு தடைபட்டு ஏரி உருவாகியுள்ளது.
உத்தரக்கண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாளங்கள் உடைந்து சரிந்து உருகியதில் தவுளிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் பனிப்பாளங்களும் பாறைகளும் சரிந்து ஆற்றில் விழுந்த இடத்தில் ரிசிகங்கா ஆற்றின் போக்கு சற்றுத் தடைபட்டுள்ளதால் ஏரிபோல் நீர் தேங்கியுள்ளது.
பனிச்சரிவின்போது உருண்டு விழுந்த பாறைகளால் உருவான இந்த நீர்த் தேக்கம் உடைந்தால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கு ஆபத்து நேரும் அபாயம் உள்ளது.