உலகிலேயே செல்போனில் சராசரியாக அதிக நேரம் செலவிடுபவர்கள் இந்தியர்கள் தான் என்பது நோக்கியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் செல்போன் டேட்டா பயன்பாடு 63 மடங்கு அதிகரித்துள்ளது. தனிநபர் டெட்டா நுகர்வு 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 76 சதவீதம் உயர்ந்துள்ளது.
சராசரியாக ஒருவர் சுமார் 5 மணி நேரம் செல்போனுடன் செலவிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் 55 சதவீதமும், இகாமர்ஸ் உள்ளிட்ட தளங்களில் 44 சதவீதமும் செல்போனை பயன்படுத்துகின்றனர்.
4 ஜி செல்போன் வைத்திருக்கும் 10 கோடி பேர் இன்னும் 2ஜி, 3ஜி சேவையையே பயன்படுத்தி வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.