இந்திய பொம்மை கண்காட்சியின் இணையதளத்தை மத்திய அமைச்சர்கள் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் ஸ்மிரிதி இரானி பியுஷ் கோயல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
உள்நாட்டில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு பிரதமர் விடுத்த அறைகூவலை தொடர்ந்தும், ‘தற்சார்பு இந்தியா’ கொள்கையை சார்ந்தும் , சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் இந்திய பொம்மை கண்காட்சி-ஏற்பாடு செய்யப்படுகிறது.
பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இணைய முறையில் நடைபெறும் இக்கண்காட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.