அடுத்த மாதம் இறுதி வரை 80 சதவீத உள்நாட்டு பயணிகள் விமான சேவை இயக்கப்படும் என விமானப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பொதுமுடக்கம் காரணமாக 2 மாத இடைவெளிக்கு பின் 2020 மே மாதம் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. இருப்பினும், விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமானங்களில் 33 சதவீதத்திற்கு மேல் இயக்க அனுமதிக்கப்படவில்லை.
உள்நாட்டு விமானங்களின் சேவை கோடைகால அட்டவணை தொடங்கும் வரை 80 சதவீதம் இயக்கப்படும் என விமானப்போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது.
அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மார்ச் மாத இறுதியில் கோடைகால அட்டவணை தொடங்க உள்ள நிலையில் 80 சதவீதம் வரை மட்டுமே உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.