தலைநகரின் எல்லையில் போராட்டம் நடத்தும், எந்தவொரு விவசாயியையும், NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கவோ, விசாரணைக்காக அழைக்கவோ இல்லை என, நாடாளுமன்றத்தில், மத்திய அரசு, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் கிசன் ரெட்டி அளித்துள்ள, எழுத்துப்பூர்வ பதிலில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கடந்த மாத இறுதியில், குடியரசு தின வன்முறையைத் தொடர்ந்து, சுமார் 40 விவசாயிகள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு, விசாரணைக்கு ஆஜராக, என்ஐஏ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியான நிலையில், அதனை மத்திய அரசு மறுத்துள்ளது.