கேரளாவிலிருந்து, தங்கள் மாநிலத்திற்கு வருபவர்களுக்கு, ஆர்டீ-பிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டாயம் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே, தற்போதைய சூழலில், கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலமாக, கேரளா மாறியிருக்கிறது.
இதனால், அங்கிருந்து பணி நிமித்தம் வருவோர், சுற்றுலா வருவோர் என அனைவரும், தங்கள் பயணத்தை தொடங்குவதற்கு, 72 மணி நேரம் முன்பு, ஆர்டீ-பிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, நெகட்டீவ் என்ற சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, டெல்லி, கோவா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து வருவோரும், கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்ற நடைமுறை, கடந்த நவம்பர் மாதம் முதல், மகாராஷ்டிராவில் அமலில் உள்ளது.