பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் உள்நாட்டுப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனசங்க நிறுவனர் தீனதயாள் உபாத்யாயின் நினைவுநாளையொட்டி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பிரதமர் மோடி பேசினார்.
பாஜக எப்போதும் அரசியலை விட நாட்டு நலனுக்கே முதலிடம் அளித்து வருவதாகவும், நாட்டுக்குத் தொண்டாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறப்பித்து வருவதாகவும் தெரிவித்தார். கருத்தொற்றுமையை பாஜக மதிப்பதாகவும், அரசியல் தீண்டாமையில் அதற்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.