பியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பதை எதிர்த்து அமேசான் நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
ஆயிரத்து எழுநூற்றுக்கு மேற்பட்ட கடைகளை நடத்தி வரும் பியூச்சர் குழுமத்தை 24 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ரிலையன்சுக்கு விற்க உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது பியூச்சர் நிறுவனம் தங்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டை மீறும் செயல் எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கில் பியூச்சர் - ரிலையன்ஸ் உடன்பாட்டைச் செயல்படுத்தத் தனி நீதிபதி தடை விதித்தார்.
இதை எதிர்த்த மேல்முறையீட்டில் இரு நீதிபதிகள் அமர்வு தடையை நீக்கியதுடன் நடைமுறைகளைத் தொடர அனுமதித்த நிலையில் அமேசான் நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.