இந்திய அரசுக்கும் - ட்விட்டர் நிறுவனத்திற்கும் மோதல் வெடித்துள்ள நிலையில், கருத்துச் சுதந்திரத்தைக் காக்கக் கடமைப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்துகொண்டு காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவாகவும் விவசாயிகள் போராட்டம் பற்றித் தவறான தகவல்களையும், தூண்டிவிடும் கருத்துக்களையும் பதிவிட்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளை முடக்கும்படி இந்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதையடுத்து எழுநூற்றுக்கு மேற்பட்ட கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக விழுமியங்களுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.