முன்களப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்தியப் பிரதேசத்தில் எமன் போல வேடமிட்ட காவலர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளை முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாகப் போடும் இயக்கம் நடைபெற்று வருகிறது.
எனவே தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சமும் தயக்கமும் வேண்டாம் எனக் கூறி அரசு ஒருபுறம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் எமன் போல வேடமிட்ட காவலர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.