பீகாரில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதே தங்களது இலக்கு என்று புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஷாநவாஸ் உசேன் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில்மயமாக்கல் நடவடிக்கைகள் மாநிலத்தில் தேவைப்படுவதாக கூறினார்.
இந்தியாவில் மிக இளம் வயதிலேயே வாஜ்பாய் தலைமையிலான அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்த பெருமைக்குரியவர் ஷாநவாஸ் உசேன். 32 வயதில் மத்திய அமைச்சரானவர் தற்போது 52 வயதில் மாநில அமைச்சராகி இருக்கிறார்.
பாஜகமூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் உமாபாரதிக்கு இவர் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.